என்னைப் பற்றிய சிறு விவரங்கள் >>
நான் விஷ்வா, code-reaper08 என்றும் இணையத்தில் அறியப்படுகிறேன்.எனக்கு கணினி நிரல் மற்றும் மென்பொருள்களை உருவாக்க பிடிக்கும். நான் பெரும்பாலும் என் நேரத்தை மென்பொருள் புதுமைப்படுத்துதல் மற்றும் தானியங்கிமுறை செய்தலில் செலவிடுகிறேன்.
நான் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கிறேன். தமிழ் மொழியில் நிரல்பணி ஆற்ற விரும்பி இந்த வலைத்தலத்தை உருவாக்கியுளேன்.
நான் இளங்கலை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படித்துக்கொண்டு இருக்கிறேன்.எனக்கு ஓவியக்கலை, புகைப்படமெடுத்தல் மற்றும் கால்பந்து ஆகியவற்றில் ஆர்வம் அதிகம்.
என்னுடைய திறந்த மூல மென்பொருள் கட்டமைப்பு, மற்றும் கட்டமைப்பு சமூகத்தித்திருக்கு உதவுதல் போன்றவற்றை ஆவணப்படுத்தவே இந்த வலைப்பதிவை உருவாகியுளேன். என்னுடைய பொறியியல் இளங்கலை நிலை (முடிவடையும் தருவாயில் உள்ளது) பற்றி வலைப்பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளேன். கீழ்காணும் மென்பொருள் களங்களில் வலைப்பதிவு செய்வதையே இப்போதைய நோக்கமாகும்
let மென்பொருள் களங்கள் = ["மென்பொருள் முன்பாக நிரலமைப்பு", "மென்பொருள் பின்தள நிரலமைப்பு", "மென்பொருள் வடிவமைப்பு", " தொடரேடு", "வலை3"];
மேலே உள்ள தலைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தாலும், எனக்கு அண்டவியல் மற்றும் தத்துவம் ஆகியவற்றிலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
எச்சரிக்கை >>
இவ்வலைத்தளத்தில் அவ்வப்போது என்னுடைய சில கவிதைகளையும், குருங்க்கூற்றுகளையும் காணலாம்.
திட்டங்கள் >>
இந்த வலைத்தளத்தை எதிர்கால விஷ்வாவிற்கு ஒரு நல்ல நினைவுத்தளமாக அமைக்க திட்டமிட்டுள்ளேன்!
இதை தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதவும் திட்டமிட்டுள்ளேன்.
எனது மென்பொருள் திறன்கள் >>
.
├──எனக்குத் தெரிந்த மற்றும் பயன்படுத்தும் நிரல் மொழிகள்/
│ ├── பைதான்
│ ├── ஜாவாஸ்கிரிப்ட்
│ ├── சி பிளஸ் பிளஸ்
│ ├── விழுத்தொடர் பாணித் தாள்கள்
│ └── குறியீட்டு மொழிகள்/
│ ├── மீசுட்டு மொழி
│ ├── எக்ஸ்.எம்.எல்
│ └── மார்க்டௌன்
├── எனக்கு தெரிந்த மற்றும் பயன்படுத்தும் மென்பொருள் கட்டமைப்புகள்/
│ ├── மென்பொருள் முன்பாக நிரலமைப்பு/
│ │ ├── ரியாக்ட்
│ │ ├── வியூ
│ │ ├── ஹியூகோ
│ │ ├── நெக்ஸ்ட் ஜேஎஸ்
│ │ └── நக்ஸ்ட் ஜேஎஸ்
│ ├── விழுத்தொடர் பாணித் தாள்கள்/
│ │ ├── தூய விழுத்தொடர் பாணித் தாள்கள்
│ │ ├── டைல்விண்ட்
│ │ ├── பூட்ஸ்ட்ராப்
│ │ ├── மெட்டிரியல் யூஐ
│ │ └── சக்ரா யூஐ
│ └── மென்பொருள் பின்தள நிரலமைப்பு/
│ ├── நோட் ஜேஸ்
│ └── எக்ஸ்பிரஸ் ஜேஸ் (சேவையகம் கட்டமைப்பு)
├── நான் பயன்படுத்தும் பிற மென்பொருள் கருவிகள்/
│ ├── உரைத்தொகுப்பிகள்/
│ │ ├── விம்
│ │ ├── வி.ஸ் கோட்
│ │ └── சப்லைம் டெக்ஸ்ட் 3
│ └── இயங்குதள ஓடு/
│ ├── பாஷ்
│ ├── ஜஸ்ஹச்
│ ├── பவர்ஷெல்
│ └── சி.எம்.டி
├── நான் பயன்படுத்தும் தரவுத்தளங்கள்/
│ ├── தரவுத்தள வினவு மொழி உள்ளவை/
│ │ ├── போஸ்ட்க்ரெஸ்குயெல்
│ │ └── மைஎஸ்குயெல்
│ └── தரவுத்தள வினவு மொழி அற்றவை/
│ ├── மொங்கோ டிபி
│ └── பையர்ஸ்டோர்
├── நான் பயன்படுத்தும் வடிவமைப்பு கருவிகள்/
│ ├── பிக்மா
│ ├── கான்வா
│ ├── அடோபி போட்டோசாப்
│ └── கிம்ப்
└── மேலும் /
├── குரோம் மென்பொருள் வசதி நீட்டிப்பு கட்டமைத்தல்
├── பயர்பாக்ஸ் ஆட்-ஆன் கட்டமைத்தல்
├── சப்லைம் டெக்ஸ்ட் மென்பொருள் தொகுப்பு கட்டமைத்தல்
├── வி.ஸ் கோட் மென்பொருள் வசதி நீட்டிப்பு கட்டமைத்தல்
├── பைபை மென்பொருள் தொகுப்பு கட்டமைத்தல்
└── என்பிஎம் மென்பொருள் தொகுதி கட்டமைத்தல்