வண்ண அளவீடு பற்றிய சிறு பதிவு

எல்லோருக்கும் வணக்கம்! இன்று நான் வண்ண அளவீடு பற்றி பார்த்துக்கொண்டு இருந்தேன். என்னுடைய மென்பொருள் கட்டமைப்புக்கு இது அவசியமாக இருக்கிறது. எனவே இந்த “வண்ண அளவீடு” என்ற தலைப்பை பற்றி படிக்கத் தொடங்கினேன். இதை பற்றி பதிவிட போதிய கருத்து என்னிடம் உள்ளது என்று நம்புகிறேன்.

வண்ண அளவீடு என்றால் என்ன

வண்ண அளவீடு என்பது ஒரு படத்தில் பயன்படுத்தப்படும் நிறங்களின் எண்ணிக்கையை தன் அசல்தன்மை மாறாமல் குறைக்கும் செயல்முறையாகும். இதில் கூர்ந்து நோக்க வேண்டியது யாதெனில், இவ்வாறு நிறம் குறைக்கப்படும் படம், அசல் படத்தை போதிய அளவுக்கு பிரதிபலிக்க வேண்டும்.

எப்படி செய்வது

படத்தில் உள்ள ஒவ்வொரு படத்துணுக்களுக்களின் rgba மதிப்புகளை கோர்த்து ஓர் சரத்தை உருவாக்க வேண்டும். பின்னர் அமைக்கப்பட்ட rgba சரத்திலிருந்து, 4 (R,G,B,A) எனும் தொகுப்பில் உள்ள மதிப்புகளை கொத்தாக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் அசல் படத்திலிருந்து வண்ணங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

வண்ண அளவீடு வழிமுறைகள்

நான் இத்தலைப்பில் படித்த வரை, இதை பற்றி தெளிவாக விவாதிக்கக்கூடிய பல பதிவுகளை பார்த்தேன். அவை என்னை மிகவும் ஈர்த்தன. அவை கூறிய பல வழிமுறைகளில், மூன்று வழிமுறைகளை முக்கியமானதாக நான் கருதுகிறேன். அவை,

  1. மீடியன் கட் வழிமுறை
  2. ஆக்ட்ரீ அடிப்படையிலான அளவீட்டு வழிமுறை
  3. K ஈவுதர அளவு கொத்தாக்க வழிமுறை

எனது கண்டுபிடிப்புகள்

K-என்பது “K"க்கான பயனர் அடிப்படையிலான/சீரற்ற மதிப்பைப் பொறுத்தது என்பதால், இது சீரான வண்ணக் குறைப்பை ஏற்படுத்தாது. எனவே ஓரளவு சிறந்த வழிமுறையின் கணக்கீடு, அப்படத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும், அப்போதுதான் அது சீரான வண்ண குறைப்பை நல்கும்.

ஆக்ட்ரீ அடிப்படையிலான அளவீட்டை என்னால் கற்று கொள்ள முடியவில்லை(கடினமாக உணர்கிறேன்), எனவே இப்போது அதைத் தவிர்க்கப் போகிறேன். என்னுடைய மென்பொருளுக்கு மீடியன் கட் வழிமுறையை வைத்து தீர்வு காண திட்டமிட்டுள்ளேன்.

என் திட்டம்

மீடியன் கட் அல்காரிதம் பற்றி நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன், மேலும் எனது சொந்த செயலாக்கத்தை புதிதாக எழுத திட்டமிட்டுள்ளேன். தற்போது நான் பிற நிரல் மொழிகளில் ஏற்கனவே உள்ள சில செயலாக்கங்களிலிருந்தும், மீடியன் கட் விக்கி வலைப்பக்கத்திலிருந்தும் படித்து கொண்டு இருக்கிறேன்.

அதுவரை இது பற்றிய என் கற்றல்களை இங்கு பதிவிடுவதை தொடர்வேன்.

உங்களிடமிருந்து விடைப்பெருவது,

~கோரீ08