கோ நிரல் நான் கண்ட சிறு தடுமாற்றங்கள்!

இன்று நான் கோ எனும் நிரல் மொழியின் சில அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள தொடங்கினேன். எனது உட்கட்டுமான மென்பொருள் சூழலை அமைக்கும் போது, ​​கோ நிரல்களின் தொகுக்கும் நேரத்தில் மிகவும் வித்தியாசமான ஒழுங்கின்மையைக் கண்டேன். இதை பற்றிய தகவல்களை இணையத்தில் தேட தொடங்கினேன். விண்டோஸ் டிஃபென்டர் இதற்கு காரணியாக இருக்கலாம் என்று பலர் கூற கேட்டேன் (இதை பற்றிய சில விவாதங்களும் அங்கு போய்க்கொண்டிருந்தன). விண்டோஸ் டிஃபென்டர் ஸ்கேனிங்கிலிருந்து எனது திட்டக் கோப்பகத்திற்கு விலக்கு அளிக்கவும் முயற்சித்தேன், இது எனது கோ நிரல்களை அதிவேகத்தில் இயங்க அனுமதிக்கும் என்ற நம்பினேன், ஆனால் அது நடக்கவில்லை ☹

சிறு நிரல்களை எழுதுவதற்கு நான் பெரும்பாலும் கிட் பாசைப் பயன்படுத்துவதால், சிபிபி'யின் பைனரிகளை தொகுக்கும் போது நான் இதற்கு முன் எந்த பின்னடைவையோ அல்லது ஒழுங்கின்மையையோ உணர்ந்ததில்லை. சிபிபி உடன் கோ இன் தொகுத்தல் வேகத்தை தரப்படுத்த ஒரு எளிய சிபிபி நிரலை எழுதினேன். அனால் அதன் தர முடிவுகள் அவ்வளவு நன்றாக இல்லை!

கீழே உள்ள திரைச்சுடுவுகளைப் பாருங்கள்,

இது சிபிபி தொகுக்கபடும் நேரம்

சிபிபி-நேரம்

இது கோ தொகுக்கபடும் நேரம்

கோ -நேரம்

6 வினாடிகள் (தோராயமாக) பெரிய வித்தியாசத்தைக் கவனியுங்கள்!

யூனிக்சு/போஸிக்சு போன்ற கணினி இயக்கு தளங்கள், கோ நிரல் மொழிக்கு உகந்ததாக இருப்பதால், கோ நிரல் மொழி தொகுப்பியின் இணைப்பான் அதன் வேலையைச் சிறப்பாகச் செய்கிறது என்ற சில கூற்றுகளையும் கேட்டறிந்தேன். யூனிக்சு/போஸிக்சு இயக்குதளங்களோடு ஒப்பிடுகையில் விண்டோஸ் இயக்குதளம் கோப்பு முறைமையில் முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. ஆகவே நிரல் இணைப்பான் தன் முழு வேகத்தோடு நிரல் இணைக்க இது ஒரு தடையாக இருக்கலாம்.

லினக்ஸ்/விண்டோஸ் விவாதம் போதும் என்று எண்ணுகின்றேன்.

விரைவில் சரியான/முழுமையான லினக்ஸ் கணினியில் இதை தரப்படுத்தி பார்க்க ஆர்வமாக உள்ளேன்.

அதுவரை உங்களிடமிருந்து விடைப்பெருவது,

~கோரீ08