எடிட்செய்

பதாகை

எல்லோருக்கும் வணக்கம்!

கடந்த வாரம் திடீரென்று ஒரு பொழுதுபோக்கு திட்டத்தை ஆரம்பித்ததால், எழுதுவதில் இருந்து சிறு விடுப்பு எடுத்துக்கொண்டேன். எடிட்செய் எனும் ஓர் இணைய பயன்பாட்டு செயலியை உருவாக்க தொடங்கினேன். எடிட்செய் என்பது மார்க்டௌன் நிரல்களுக்கு முன்னோட்ட பார்வை அளிக்கும் ஓர் இணைய பயன்பாட்டு செயலி ஆகும்.

திட்டம்

இணையத்தில் பல மார்க்டவுன் முன்னோட்ட பார்வை அளிக்கும் செயலிகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் சொந்தமாக அவ்வாறு ஒன்றை உருவாக்க விரும்பினேன். இதற்கு பொருத்தமான தொழில்நுட்ப அடுக்கிற்காக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்.

பிறகு, நான் நெக்ஸ்ட் ஜேஎஸ் மற்றும் டைல்விண்டை இதற்கு தேர்வு செய்தேன். நான் இந்த செயலியியை திறந்த மூல மென்பொருள் செயலியாக செய்ய திட்டமிட்டிருந்ததால் உள்ள நெக்ஸ்ட் ஜேஎஸ் மற்றும் டைல்விண்டை இறுதி செய்தேன்.

நான் இச்செயலி பொருட்டு வேலை செய்ய ஆரம்பித்தேன். இதில் கடினமான பகுதி என்னவென்றால், மார்க்டவுன் வடிவமைப்பிற்கான கடுமையான விவரக்குறிப்புகள் இல்லாதது, என் நிலைமையை மேலும் மோசமாக்கியது. GFM ஐக் கையாளக்கூடிய திறமையான மற்றும் இலகுரக பாகுபடுத்திக்கான தேடலை தொடங்கினேன். இறுதியாக marked எனும் பாகுபடுத்தியை பயன்படுத்த தொடங்கினேன்.

நான் எடிட்செய்‘ஐ எளிமையாக வைக்க விரும்பினேன், அதனால் நான் சேவையகம் மற்றும் தரவுத்தளத்தை ஒருபோதும் திட்டமிடவில்லை. எடிட்செய் என்பது சாதாரண எழுத்துப் பயன்பாடு செயலியாகும் என்பதால், சேமிப்பு செயல்பாட்டிற்கு லோக்கல் ஸ்டோரேஜெய் தரவுத்தளமாக பயன்படுத்தினேன்.

கூடுதல் அம்சங்களைச் சேர்த்தல்

இச்செயலி பொருட்டாக சிறிது காலம் நிரல் படைத்த பிறகு, இச்செயலியுடன் ஒற்றுப்போகும் ஜென் இசையைச் சேர்க்க நினைத்தேன். ஜென் இசையுடன் மார்க்டௌன் தட்டச்சு செய்யும் ஒரு புது அம்சத்தை உருவாக்கினேன். இது மிகவும் கடினமாக இருந்தது, பல முயற்சிகளுக்கு பிறகு இதில் எனக்கு வெற்றி கிடைத்தது.

இச்செயலியை செய்து முடித்தது ஒரு அற்புதமான அனுபவம். ஜென்-இசையை இத்துடன் சேர்ப்பது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது.

மேலும் சில தகவல்கள்

பெயர் காரணம்

நான் இச்செயலிக்கு ஓர் நல்ல பெயரை தேடிக்கொண்டிருந்தேன், பல பெயர்களை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று தோன்றியது ஓர் பெயர் அது தான் எடிட்செய். நான் “EDIT” என்ற ஆங்கில வார்த்தையை “செய்” என்ற தமிழ் வார்த்தையுடன் சேர்த்து, எடிட்செய் என்று பெயர் சூட்டினேன்.

நீங்கள் இதன் மூலம் எடிட்செய்‘ஐப் பயன்படுத்தலாம்

எடிட்செய்‘யின் மூலக் நிரலை இங்கே காணலாம்.

வாசித்ததற்கு நன்றி!

அதுவரை உங்களிடமிருந்து விடைப்பெருவது,

~கோரீ08