வணக்கம் வையகமே!
நான் எனது சொந்த வலைப்பதிவை https://cr08.netlify.app இல் தொடங்குகிறேன் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் பொது பொறுப்பையும் தருகிறது. நான் எப்போதும் விரும்பும் ஒரு விஷயத்தில் ஒன்று பொதுவெளியில் எழுதுவது. கீழ் உள்ள நான்கு காரணங்களே என்னை இவ்வலைப்பதிவை தொடங்க ஊக்குவித்தன,
- பல்வேறு தொழில்நுட்பங்கள் பற்றிய எனது தொழில்நுட்ப அவதானிப்புகள், கற்றல் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.
- எனது பல்கலைக்கழக நாட்களிலிருந்து தொழில் வாழ்க்கை வரை டெவலப்பர்/பொறியாளராக எனது வாழ்க்கையை ஆவணப்படுத்துதல்.
- சமூக-தத்துவம், அண்டவியல் மற்றும் நான் பொதுவாக ஆர்வமுள்ள விஷயங்களைப் பற்றி எழுதுதல்.
- என்னுடைய டிஜிட்டல் நினைவகமாக இந்த வலைத்தளத்தை அமைத்தல்.
டெவலப்பர்/மென்பொருள் பொறியாளர் பாதையில் நான் கடினமாக உணர்ந்த சிலவற்றை பற்றி பேசுவது, என்னை போன்ற பிறருக்கு உதவும் என்று நம்புகிறேன்.
தங்களின் நேரத்திற்கு நன்றி இனிய நாள்!
விடைபெறுவது உங்கள்,
~/கோரீ08