மீடியன் கட் அமலாக்கம்

பைத்தானைப் பயன்படுத்தி மீடியன் கட் வழிமுறையின் எனது செயலாக்கத்தை உங்களுக்கு வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டத்தை நான் முதன்முதலில் தொடங்கியபோது, வண்ண அளவீடு தலைப்பைப் பற்றி முழுமையாக அறியாமலேயே இருந்தேன். பின்பு ஏற்கனவே உள்ள செயலாக்கங்களைப் படிப்பதில் அதிக நேரம் செலவிட்டேன், அவற்றில் சில எனது செயலாக்க நிரலை எழுத எனக்கு மிகவும் மதிப்புமிக்க தடயங்களை வழங்கின. நான் குறிப்பிடும் பல்வேறு செயலாக்கங்கள் வேறு நிரலாக்க மொழியிலோ அல்லது போலி-குறியீடு வகையிலோ இருந்தாலும், மீடியன் கட் வழிமுறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி சிறந்த உள்ளீடுகளை எனக்கு வழங்கின.

சில கூடுதல் தகவல்கள்

பைத்தான் நிரல் மொழியில் வண்ண அளவீட்டை பற்றி ஆய்வு செய்யும் போது, ​​PIL எனும் மென்பொருள் லைப்ரரியை பற்றி அறிந்துக்கொண்டேன். அதில் வண்ண அளவீட்டை நிகழ்த்த ஓர் உள்ளமைக்கப்பட்ட முறை உள்ளதை நான் அறிந்தேன். இருப்பினும், நான் சொந்தமாக மீடியன் கட் வழிமுறையை செயல்படுத்த விரும்பியதால், நான் அந்த உள்ளமைக்கப்பட்ட முறையை பயன்படுத்தவில்லை. மீடியன் கட் வழிமுறை (உள்ளமைக்கப்பட்ட நூலகங்களைப் பயன்படுத்தாமல்) செயல்படுத்தப்படும் வகையில் இந்த நிரலை உருவாக்கினேன்.

எப்படி உபயோகிப்பது

இந்த கிட்அப் நிரல் களஞ்சியத்தில் பயன்பாட்டு வழிமுறைகள் மற்றும் மூலக் நிரலை காணலாம்.

நிரலை பயன்படுத்தி பார்த்து, உங்கள் அனுபவத்தை எனக்குத் தெரிவிக்கவும். இது இந்நிறலை மேலும் மேம்படுத்த உதவும்.

அதுவரை உங்களிடமிருந்து விடைப்பெருவது,

~கோரீ08