ஒருவழியாக வார இறுதி!

காலை 🌞

காலை 8:00 மணிக்கு எழுந்தேன், பின்பு 1/2 மணிநேரம் ஓய்வெடுத்தேன். நல்ல குழம்பி அருந்திவிட்டு, என் தம்பி உடன் நடைப்பயணம் செய்தேன். மின்னஞ்சல் உட்பெட்டியில் ஏதேனும் புதிய மின்னஞ்சல்கள் இருக்கிறதா என்று சரி பார்த்தேன்.

மதியம் 🕛

என் பெற்றோருடன் நன்றாக மதிய உணவு சாப்பிட்டேன். இரண்டு திரைப்படங்களைப் பார்த்துவிட்டு, சிறிது நேரம் தூங்கினேன்.

மாலை 🌃

வேலை வாய்ப்புகள் தொடர்பாக நண்பனுடன் பேசினேன், TEDx-SIST மீட்டிங்கில் கலந்துகொண்டேன்.

இரவு 🌑

இப்போது நான் எனது வலைப்பதிவில் இந்த விடயங்களை பதிவு செய்கிறேன், அதே நேரத்தில் வரும் வாரத்தில் ஒரு புதிய மென்பொருள் செய்ய திட்டமிட்டுள்ளேன்!

நான் பார்த்த திரைப்படங்கள்,

  1. பிளேட் ரன்னர் - 1982 –> நுண்ணறிவு மிளிரும் படைப்பு!
  2. திருச்சிற்றம்பலம் –> யதார்த்த திரைக்கதை.

வரும் பதிவுகளில் நான் செய்யவிருக்கும் புது மென்பொருளை பற்றி பேசவும் திட்டமிட்டுள்ளேன், சிறிது காத்திருங்கள்!

நாளை சந்திப்போம்

உங்களிடமிருந்து விடைப்பெருவது,

~கோரீ08